மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அருள்ஜோதி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் பிரபு, பாலசுப்ரமணி, செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், நோய் காக்கும் மருந்து பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். மருந்து பொருள் உற்பத்தி விலையிலிருந்து பன்மடங்கு அதிகபட்ச விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். மருந்து பொருள்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காதோரம் கவிதை பேசுற கம்மல், கழுத்தை சுத்தி கம்பீரம்.. நீங்களும் அழகு தேவதையா மாறணுமா.. அப்ப...ஓடி வாங்க தினமலர் கண்காட்சிக்கு..
-
வாழை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
-
ஆதிதிராவிடர் நலத்துறை முகாம் 75 மனுக்கள் மீது உடனடி தீர்வு
-
ரத்த தான முகாம்
-
ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த இருவர் கைது
-
பணியின் போது இறந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்
Advertisement
Advertisement