ரத்த தான முகாம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது. 40 பேர் ரத்த தானம் வழங்கினர்.

மருத்துவர்கள் ரபியா பேகம், திவ்யா ஆகியோர் ரத்த தானத்தை சேகரித்தனர். இம்முகாமில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் இபுராஹிம் சாபிர், மாவட்ட செயலாளர் சுலைமான்,மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் நசூர்தீன் பங்கேற்றனர்.

Advertisement