எண்கள் சொல்லும் செய்தி:

2,00,000



நடப்பு நிதியாண்டில் ஹட்கோவின் மொத்த கடன் நிலுவை 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான கடன் தேவை வலுவாக இருப்பதே இதற்கு காரணம் என ஹட்கோ தலைவர் சஞ்சய் குல்ஷ்ரேஸ்தா தெரிவித்துள்ளார்.



5,400



நாட்டின், எதிர்கால அணுமின் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 5,400 டன் யுரேனியம் தேவைப்படும். இதில் உள்நாட்டு உற்பத்தி 30 சதவீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது என பார்லிமென்ட் குழு தெரிவித்துள்ளது.



20,000



நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் சேர்த்து, 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான செயல்பாட்டு பணப்புழக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் செயல் தலைவர் பிரோஜ்ஷா கோத்ரெஜ் தெரிவித்துள்ளார்.



3000



மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள சத்தீஸ்கர் மாநில மின்னணு உற்பத்தி மையம் வாயிலாக, 3,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



1,48,000



நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், அரசு மின்னணு சந்தையான 'ஜெம்' வாயிலான மொத்த பரிவர்த்தனை மதிப்பு 1.48 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement