பின்னலாடை ஏற்றுமதியில் ஐரோப்பா மீண்டும் முதலிடம்
திருப்பூர்: அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு எதிரொலியாக, இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும், ஐரோப்பாவுக்கு 20,875 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் 2021 வரை, ஐரோப்பாதான் மிகப்பெரிய சந்தையாக இருந்தது. பின்னர் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்து முதலிடத்தைப் பிடித்தது. ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்கா இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஏற்றுமதி வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால், 2025-26ம் நிதியாண்டில் ஐரோப்பா மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில், ஐரோப்பிய நாடுகளுக்கு 20,875 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, மொத்த ஏற்றுமதியில் 31 சதவீதமாகும். அமெரிக்காவுக்கு 20,761 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. அதன் பங்கு, 30 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல், பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கான ஏற்றுமதியும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 8 சதவீதமாக இருந்த பங்கு, தற்போது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் மட்டும் ஐரோப்பாவுக்கு 3,431 கோடி ரூபாயும், அமெரிக்காவுக்கு 3,252 கோடி ரூபாயும் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. அமெரிக்கா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா மீண்டும் முக்கிய சந்தையாக உருவெடுத்துள்ளது. மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியும் சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது,' என்றனர்.
இந்திய பின்னலாடை ஏற்றுமதி (Bar Chart) (கோடி ரூபாயில்) நாடு 2024-25 2025-26 ஐரோப்பா 19,199 20,875 அமெரிக்கா 22,486 20,761 பிரிட்டன் 5,583 6,129 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5,403 6,174 ஆசிய நாடுகள் 2,132 2,564 ஆப்ரிக்க நாடுகள் 1,976 2,056 சவுதி அரேபியா 1,673 1,946 தென் அமெரிக்க நாடுகள் 1,481 1,675 ஆஸ்திரேலியா 1,465 1,496 கனடா 1,063 1,104
மேலும்
-
எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகள்!
-
'கோபர்தன்' திட்டத்தால் எரிவாயு இறக்குமதி செலவு குறையும்: இந்திய பயோகாஸ் சங்கம் தகவல்
-
பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு; உற்பத்தியாளர்கள் கவலை
-
வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் சோதனை மையங்கள் விரிவுபடுத்த பி.ஐ.எஸ்., திட்டம்
-
மது உ ற்பத்தியில் தவறான தகவல்; டியாஜியோவுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எச்சரிக்கை
-
எண்கள் சொல்லும் செய்தி: