வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் சோதனை மையங்கள் விரிவுபடுத்த பி.ஐ.எஸ்., திட்டம்
புதுடில்லி: வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் பரிசோதனை வசதிகளை நாடு முழுதும் விரிவுபடுத்த, இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ்., திட்டமிட்டுள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வெள்ளி நகைகள் பக்கம் திரும்பி வருகின்றனர். இதையடுத்து, வெள்ளி நகைகளின் துாய்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் பரிசோதனைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் பெறுவது, கடந்த 2005ம் ஆண்டு முதல் விருப்ப அடிப்படையில் இருந்து வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் முதல், ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி நகைகளுக்கு, 'எச்.யு.ஐ.டி.,' எனப்படும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக நகைகளின் துாய்மையை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க முடியும்.
வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் பெறும் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது.
தற்போது, வெள்ளி நகைகளை பரிசோதிக்க, நாடு முழுதும் பி.ஐ.எஸ்., அங்கீகாரம் பெற்ற, 230 பரிசோதனை மற்றும் ஹால்மார்க் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதிகரித்து வரும் தேவையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தற்போதைய ஆய்வகங்கள் வாயிலாக கையாள முடியும். அதற்குள், நாடு முழுதும் பரிந்துரை மற்றும் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என, பி.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.
வெள்ளி நகைகளுக்கு அதிகரிக்கும் ஹால்மார்க் ஆண்டு அளவு(லட்சம்) 2024-25 32 2025-26 59 அதிகரிப்பு 27
@block_G@
தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் துாய்மையை பரிசோதித்து, அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வதே ஹால்மார்க். வெள்ளி நகைகளுக்கு தற்போது 800, 835, 925, 958, 970, 990, 999 என, ஏழு துாய்மை தரங்கள் உள்ளன. இதில், 958 மற்றும் 999 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஹால்மார்க் முத்திரையில் 'சில்வர்' என்ற பி.ஐ.எஸ்., தர முத்திரை, துாய்மை தர எண் மற்றும் 'எச்.யு.ஐ.டி.,' குறியீடு ஆகிய மூன்று விபரங்கள் இடம்பெறும்.block_G