அன்னிய முதலீடு ரூ.12,921 கோடி

நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் 12,921 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாக 'சி.எஸ்.டி.எல்.,' வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

மார்ச் - ஜூன் ஆகிய நான்கு மாதங்களிலும் கணிசமான அளவில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள், ஜூலை, ஆகஸ்ட்டில் மீண்டும் முதலீடு செய்துள்ளனர்.

அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் ஆகியவை அன்னிய முதலீடுகள் வரத்துக்கு காரணமாக இருந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்னிய முதலீடு

ஜூலை

ரூ. 20,200 கோடி

ஆக., (7ம் தேதி வரை)

ரூ. 12,921 கோடி

Advertisement