ஐ.பி.ஓ., அலசல்: துாத் டிரான்ஸ்மிஷன்

'தூட் டிரான்ஸ்மிஷன்' நிறுவனம் வாகன மற்றும் வாகனம் சாரா பயன்பாடுகளுக்கான மின், மின்னணு அமைப்புகளை உற்பத்தி செய்கிறது. இதன் தயாரிப்புகளில் வயரிங் ஹார்னஸ்கள், ஒருங்கிணைந்த மின் வினியோக அமைப்புகள், சுவிட்ச், டெர்மினல்கள், கனெக்டர்கள், டேட்டா கேபிள்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

இதன் தயாரிப்புகள் இருசக்கர, மூன்றுசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, வர்த்தக, விவசாய மற்றும் தொழில்துறை வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களுக்கான தானியக்க வசதிகள், அதிகரித்து வரும் மின்னணு அம்சங்களுக்கு ஏற்ப பல்வேறு மின்னணு பாகங்களையும் உற்பத்தி செய்கிறது.

Latest Tamil News

Tamil News

சிறப்பம்சங்கள்





* இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனங்களுக்கான வயரிங் ஹார்னஸ் சந்தையில் வலுவாக உள்ளது

* ஐ.சி.இ., மற்றும் இ.வி., ஆகிய இருவகை வாகனங்களுக்கும் தயாரிப்புகளை வழங்குகிறது

* பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., ஹோண்டா, ராயல் என்பீல்டு போன்ற முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கு தயாரிப்புகளை வழங்குகிறது

* வயரிங் ஹார்னஸ், பேட்டரி பேக்குகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளை கொண்டுள்ளது.

* வர்த்தக மற்றும் ஆப்-ஹைவே வாகனங்களுக்கும் உபகரணங்களை தயாரிக்கிறது

* பல முக்கிய வாடிக்கையாளர்களுடன் நீண்டகால வர்த்தக உறவை கொண்டுள்ளது

* இ.வி., வாகன பயன்பாடு அதிகரிப்பது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவையை ஆதரிக்கலாம்.



இடர்கள்





* இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன துறையை அதிகமாக சார்ந்துள்ளது

* வருவாயில் வயரிங் ஹார்னஸ் தயாரிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன

* சில முக்கிய வாடிக்கையாளர்களை அதிகமாக சார்ந்துள்ளது

* உற்பத்தி திறன் சில மாநிலங்களில் குவிந்துள்ளது

* மூலப்பொருட்கள் மற்றும் பாகங்களுக்கு சில சப்ளையர்களை சார்ந்துள்ளது

* மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வினியோக பாதிப்புகள்

* வாகன தொழில்நுட்பங்களில் ஏற்படும் மாற்றங்கள்

* நிறுவனத்திற்கு கணிசமான கடன்கள், பெற வேண்டிய தொகைகள் மற்றும் நிலுவையில் வழக்குகள் இருப்பதால், பணப்புழக்கம் மற்றும் நிதிநிலை பாதிக்கப்படலாம்.



கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்

Advertisement