ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்

6

ராஞ்சி: ஜார்கண்டில் அரசு பணியாளர் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக சென்றனர். அவர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 25ம் தேதி முதல் ராஞ்சியில் நடக்கும் போராட்டம், இன்று 17வது நாளை எட்டி உள்ளது.


இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) மாணவர்கள் சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர். அதனை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறி சென்றனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இருப்பினும் மாணவர்கள் சட்டசபையை நெருங்கி சென்றதால், அவை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.

முற்றுகை



இதற்கிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு எதிர்க்கட்சி தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜ தலைவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

கைது



இந்நிலையில் தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டேவை சிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement