போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சுபம் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் சரளா சுரேஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பள்ளியின் செயலாளர் இந்திரா காந்தி பாலு, பொருளாளர் ரகு, பள்ளியின் இயக்குநர் காமராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.

மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம், வட பொன்பரப்பி காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை வழியாக விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.

பள்ளியின் நிர்வாக அலுவளர் சிவா நன்றி கூறினார்.

Advertisement