ஜே.ஆர்.சி., ஆலோசகர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி ஜே.ஆர்.சி., ஆலோசகர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கவுரவ செயலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

மருத்துவர் திவ்யதர்ஷினி,  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து பயிற்சி அளித்தார். இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் சேகர் ஆலோசனை வழங்கினார்.

இதில், ஆசிரியர் ராமச்சந்திரன், நல்லாசிரியர் வீரராகவன், முதுநிலை ஆசிரியர் கனகராஜ், ஜே.ஆர்.சி., இணை கன்வினர் ராஜூ மற்றும் ஜே.ஆர்.சி., ஆலோசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

Advertisement