அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு; காரணம் இதுதான்!
- நமது சிறப்பு நிருபர்-
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மாணவர் விசா கட்டுப்பாடுகள், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் குறைந்த கல்லி கட்டணம் ஆகியவற்றின் விளைவாக, இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டா சேர்க்கை அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விசா கட்டுப்பாடுகள், பல்கலைக்கழகத்தின் உயர்ந்த உலகளாவிய தரவரிசை மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணச் சலுகைகள் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 136 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2026-27 கல்வியாண்டில் 160 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் துபாய், சவூதி அரேபியா, ஓமன், கத்தார், சிங்கப்பூர், இங்கிலாந்து, கொரியா, ஜப்பான், கனடா, அங்கோலா, அஜர்பைஜான், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் குறைந்ததாக இருப்பதால், இவர்கள் இங்கு சேர்ந்துள்ளனர்.
கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், தகவல் தொடர்புப் பொறியியல் போன்ற படிப்புகளில் சேருபவர்களிடமிருந்து பல்கலைக்கழகம் 7,500 அமெரிக்க டாலர் (ரூ.7 லட்சத்து 51 ஆயிரம்) கட்டணம் வசூலிக்கிறது. மற்ற படிப்புகளுக்கு, கட்டணம் 3,750 அமெரிக்க டாலர் (ரூ.3.58 லட்சம்) ஆகும்.
இந்த ஆண்டு, மாணவர்கள் கணினி அறிவியல் பொறியியல் மற்றும் மின்னணுவியல், தகவல் மற்றும் தொடர்பு பொறியியல் தவிர, பலதரப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் உயிரி மருத்துவப் பொறியியல், வேதியியல் பொறியியல், தொழில்துறைப் பொறியியல், மின்னணுவியல் பொறியியல், சுரங்கவியல், ரோபோட்டிக்ஸ், உற்பத்திப் பொறியியல் மற்றும் புவித் தகவல் அறிவியல் போன்ற இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
2026-27 கல்வியாண்டிற்காக அண்ணா பல்கலை அதிக விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் தற்போது 50 நாடுகளை சேர்ந்த 600 வெளிநாடு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டினரும் பயின்று வருகின்றனர் என பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்டர்நேஷனல் தரத்துக்கு உசந்துருச்சா அல்லது ஏதாவது படிச்சு வைப்போம் என்று சேருகிறார்களா ?? அல்லது இந்தப்பேருக்கு ஏத்த தரம்தான் இருக்கும் ன்னு சேர்கிறார்களா ??
உலகில் தலைசிறந்த கல்விநிலையங்களுள் ஒன்றாக முதல் 100 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகம் வரவேண்டும்.
சார் வைத்த ஆள் பிரியாணிக்கடை வைத்து பெண் பிள்ளைகளை மிரட்டி படிய வைத்தால் 100 என்ன பத்தாயிரம் இடத்துக்குள் கூட வரமுடியாது.
Just a coincidence? Albert Einstein institution (AEI) is just 2 Km away from the Boston University, School of Communication where Abhijeet Dipke attended his MS course
AEI was established by regime change expert Gene Sharp and it's famous for its regime change CANVAS courseமேலும்
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்