சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு

திருப்பூர்: ஆடி மாத, சோமவார தேய்பிறை பிரதோஷ நாள். இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.

வெள்ளி ரிஷப வாகனத்தில், உற்சவர் தம்பதி சமேதராக எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அலகுமலை கயிலைநாதர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.

டி.பி.ஏ. காலனி காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், பூச்சக்காடு ராஜவிநாயகர் கோவில் காசி விஸ்வநாதர் சன்னதி, அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தீஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement