தினமலர் செய்தி எதிரொலி வைகை ஆற்றில் துாய்மை பணி

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் நாணல், கருவேல மரங்கள் சாக்கடை கழிவு காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து வைகை சுத்தம் செய்யப்பட்டது.

காசியைவிட அதிக புண்ணியம் தரும் ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றங்கரை முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழங்க ஹிந்துக்கள் வந்து செல்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அமாவாசை தினங்களில் பத் தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள்.

வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாததுடன் நாணல், கருவேல மரங்கள் சாக்கடை கழிவு தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து வைகையாற்றை சுத்தம் செய்தனர்.

நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள், என்பதால் கடந்த ஒரு வாரமாக சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது மேலும் பக்தர்கள் குளிக்க அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் இருந்து கழிவு நீர் நடந்து செல்லும் பாதையில் செல்வதால் குழாய்கள் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement