அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 14ம் தேதி நடக்கிறது

திருப்பூர்:அனைவருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி, வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளையும் திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வரும் 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெறும் ஒன்றுபட்ட மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்கவும், பயிர்க்கடன் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் பங்கேற்கச் செய்யவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

.

Advertisement