ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க தீர்மானம்
செஞ்சி: செஞ்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் மணிமாறன், உதயகுமார் முன்னிலை வகித்தனர். துணைச் சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், கமலா, பூங்காவனம், மல்லிகா, அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அஞ்சாஞ்சேரி பழங்குடியினர் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று போர் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.
மேலும், 2.160 கி.மீ., துாரம் உள்ள காரை – கொசப்பாளையம் சாலை, 3 கி.மீ., துாரம் உள்ள மாதப்பூண்டி சாலை, 2.800 கி.மீ., துார மட்டப்பாறை ஆகிய ஒன்றிய சாலைகளை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கவும், ஒன்றிய செலவினங்களுக்கு ஒப்புதல் வழக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க.,
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை குறித்த தனி தீர்மானம் நிறைவேறியது!
-
பேராசிரியர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது
-
கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம்
-
என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியருக்கு கத்தி குத்து
-
‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு பாட விருப்பங்களை நாளைக்குள் புதுப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement