விழிப்புணர்வு மனித சங்கிலி

விக்கிரவாண்டி: அன்னியூர் அரசு கலைக் கல்லுாரியில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு என்ற மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் அசோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். போதை ஒழிப்பு குறித்து மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் ரகுபதி, ஊழியர்கள் ராசு, ரேவதி, விஜயலட்சுமி, மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார்.

Advertisement