சான்றிதழை விரைவாக வழங்க புதிய இணையதள சேவை: முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
புதுச்சேரி: குடியிருப்பு, சாதி, வருமான சான்றிதழ்களை விரைவாக கொடுக்க புதிய இணையவழி சேவைதளத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் வருவாய்த்துறை சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும் வழங்கும் நோக்கில் தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் https://serviceonline.gov.in எனும் புதிய இணையவழி சேவைத் தளத்தை உருவாக்கியுள்ளது.
இதனை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் குடியிருப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறை சேவைகளுக்கு இணைய வழியில் எளிதாக விண்ணப்பித்து, சேவைகளைப் பெற முடியும்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற்காக பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய தேவையைக் குறைத்து, சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி, உதவித்தொகை மற்றும் பிற தேவைகளுக்காக குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்கள் அடிக்கடி தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களும் பெற்றோர்களும் இச்சான்றிதழ்களுக்காக வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும் வகையில் இச்சிறப்பு இணையவழி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 17ம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெற்றோர்கள் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட பள்ளியில் சமர்ப்பித்தால் போதுமானது. பள்ளி நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவு செய்யப்பட்டு, வருவாய்த்துறையின் உரிய சரிபார்ப்புக்குப் பின்னர் சான்றிதழ்கள் மாணவர்கள் பயிலும் பள்ளியின் மூலமாகவே வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நேரம் மற்றும் அலைச்சல் குறைவதுடன், தேவையான சான்றிதழ்களை எளிதாகவும் உரிய காலத்திலும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சென்டர் மீடியனை கடக்கும் வாகனங்கள்
-
அலங்கோலமாக காட்சியளிக்கும் மானாமதுரை அலங்கார குளம்
-
தினமலர் செய்தி எதிரொலி வைகை ஆற்றில் துாய்மை பணி
-
காஷ்மீரி பண்டிட்களுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
-
ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடு
-
குறைதீர் கூட்டத்தில் மனுவை பதிய காத்திருந்து மக்கள் அவதி: சர்வர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்