லோக்சபாவில் இன்றும் அமளி; அரசும், எதிர்க்கட்சியும் உடன்பாடு செய்ய சபாநாயகர் வேண்டுகோள்
புதுடில்லி: ''தொடர் அமளிக்கு மத்தியில், முக்கிய மசோதாக்கள் மீது சபையில் விவாதம் நடைபெற ஏதுவாக, அரசும், எதிர்க்கட்சியும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர வேண்டும் '' என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்றும் (ஆகஸ்ட் 11) லோக்சபாவில் அமளி காரணமாக அவை செயல்படால் மதியம் 2 மணி வரை முடங்கின. ஜூலை 20ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, பல மசோதாக்கள் விவாதமின்றி அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.
இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 11) அவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
டில்லியில் போராட்டத்தில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
சபை எந்தவித இடையூறும் இன்றி செயல்படும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய மற்ற பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கலாம். முக்கிய மசோதாக்கள் மீது சபையில் விவாதம் நடைபெற ஏதுவாக, அரசும், எதிர்க்கட்சியும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்பிக்கள் ஒருமித்த கருத்தை எட்டி ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபட வேண்டும். சபை செயல்படாதபோது நான் வேதனைப்படுகிறேன். பார்லிமென்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், சபைக்குள் பதாகைகளை எம்பிக்கள் யாரும் காண்பிக்க கூடாது.
கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களும் பார்லிமென்டில் விவாதங்கள் நடைபெறுவதைக் காண விரும்புகிறார்கள். இவ்வாறு ஓம்பிர்லா பேசினார்.
@block_P@
பார்லிமென்ட் வளாகத்தில் ஆளும் தேஜ கூட்டணி எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி சம்பவம், ராமர் கோவில் நன்கொடை முறைகேடு ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்.
இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய முடக்கத்திற்கு எதிராக தேஜ கூட்டணி எம்பிக்கள் எதிர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.block_P
அமளி இல்லாமல் நானில்லை எனக்கொரு அமளி இருக்கின்றது என்றும் அது என்னை காக்கின்றது - இப்படிக்கு அமளி செய்யும் அசிங்க கூட்ட எம் பிக்கள்
ஜனநாயக நாட்டில் எதற்கும் விதிகள் வகுக்க வேண்டும். உறுப்பினர்கள் அமளி. தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் தங்கி பார்வையிட்டு கட்டுபடுத்த தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்று இருக்க வேண்டும். நீதிமன்றம் மீது ஜனாதிபதி கவர்னர் பிரதிநிதிகள் தங்கி பார்வையிட்டு சட்ட விரோத விசாரணை மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம். போலீஸ் நிலைய விதி மீறல்கள் தங்கி பார்வையிட்டு குற்றவியல் நீதிபதி பிரதிநிதி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம். வேண்டுகோள் எல்லாம் பொழுதை போக்கும் செயல். அதன் பின் அரசு அதிகாரிகளை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர முடியும். 2ஜி கனிமொழி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியும் என்றால், சபை ஒழுங்கு இருக்காது.
இது கஷ்டம் இந்தியாவில்??? ஏன்???? 1 நீதிபதி நீதியாக செயல்படுவதில்லை 2 அரசியல்வாதிகள் வெறும் அரசியல் வியாதிகள் பணத்தை விழுங்கும் முதலைகள் 3 காவல் துறை முக்கிய மந்திரியின் ஆணையை செயல்படுத்தும் ஏவல் துறை 4 அரசு நிறுவனங்கள் பணம் விழுங்கும் வெறும் முரசு கொட்டும் நிறுவனங்கள்
நாடாளுமன்றத்தை முடக்குபவர்களை சஸ்பென்ட் செய்து விட்டு இருப்பவர்களை வைத்து சபையை நடத்த வேண்டியது தானே. இருப்பவர்கள் விவாதிக்க தயார் இல்லை என்றால் விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்றி விட்டு தொடரை முடித்து விட வேண்டியது தான்.