விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம்

தெக்கலுார்:கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், புதுப்பாளையத்தில் நடைபெற்றது.

புதுப்பாளையம் கிளை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். சோமனுார் கிளை தலைவர் பூபதி, அவிநாசி கிளை தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சோமனுார், தெக்கலுார், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லுார், கண்ணம்பாளையம் ஆகிய கிளை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 2025ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து கூலி குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து,கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் நல அலுவலர்கள் ஓரிரு நாளில் சந்தித்து முறையிடுவது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூலி குறைப்பு கைவிடாத பட்சத்தில் அடுத்த கூட்டமைப்பு கூட்டம் ஓரிரு வாரங்களில் கூடி ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனவும்தீர்மானிக்கப்பட்டது.

Advertisement