மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்க அறிவுறுத்தல்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து துாய்மைப் பணியாளரிடம் வழங்க வேண்டும் என்று பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று அறிவுறுத்தினர்.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக காந்தி சிலை வரை 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு தினந்தோறும் பயன்படுத்தப்படும் குப்பையை பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர்.
பின் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து உரம் தயாரித்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் செல்வராஜ் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ், சரவணன், கற்பகவள்ளி, பிரியங்கா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பற்றி வீடு வீடாக சென்று குப்பை சேகரித்தனர்.
குப்பை சேகரிக்க வரும் துாய்மைப் பணியாளரிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
--
மேலும்
-
போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை
-
சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து5 பவுன் பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
-
பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம்: நுரையாக பொங்கி வந்ததால் பரபரப்பு
-
இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி
-
அம்பத்துாரில் 40 வயது பெண் சரமாரியாக வெட்டி கொலை
-
குர்னுார் பிரார் 'புயல்' வீசுமா... * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா