அம்பத்துாரில் 40 வயது பெண் சரமாரியாக வெட்டி கொலை
அம்பத்துார்: அம்பத்துாரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அம்பத்துார், மேனாம்பேடு, கைலாசம் தெருவில், 40 வயது பெண் ஒருவர், நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மர்மநபர்கள், அப்பெண்ணை வழிமறித்து கையால் தாக்கியுள்ளனர்.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அப்பெண்ணை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அப்பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த புதுார் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் யார்; எதனால் கொல்லப்பட்டார் என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
Advertisement
Advertisement