தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு மாஜி எம்.எல்.ஏ., நிவாரண உதவி

புவனகிரி: தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.

புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுாரில் வசித்து வந்த 16 இருளர்களின் குடிசை வீடுகள், கடந்த சில தினங்களுக்கு முன் மின்கசிவால், தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.

இதனை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்தில் உடமைகளை இழந்த 16 குடும்பங்களுக்கும் தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், புதிய வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் வாங்கி தருவதாகவும், அரசின் நிவாரண உதவிகள் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement