அகில இந்திய போட்டி: போலீஸ் ஏட்டு பதக்கம்

விழுப்புரம்: அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற போலீஸ் ஏட்டுவை, எஸ்.பி., பாராட்டினார்.

தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத்தில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டி கடந்த ஜூலை, 21ம் தேதி முதல் 30ம் தேதி நடந்தது.

இதில், விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய ஏட்டு வருண்குமார் கராத்தே போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசு வென்று சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற ஏட்டு வருண்குமாரை, எஸ்.பி., மதிவாணன் பாராட்டினார்.

Advertisement