சிறுமி பலாத்கார கொலை வழக்கு டி.எஸ்.பி. யிடம் குறுக்கு விசாரணை

கோவை: சூலுார் அருகே, 10 வயது சிறுமி, மே 21 ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். வழக்கில் நாகப்பட்டினம் கார்த்திக், தஞ்சாவூர் மோகன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு சாட்சியம் நிறைவடைந்ததை தொடர்ந்து, விசாரணை அதிகாரியான கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கரிடம், எதிர் தரப்பு வக்கீல் சசிகுமார் குறுக்கு விசாரணை செய்தார். 

Advertisement