வலிமை பெற்ற வளை கரங்கள் ஜூடோவில் மாணவியர் அசத்தல்

திருப்பூர், ஆக. 15–

பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாவட்ட மாணவியர்  ஜூடோ போட்டி, எஸ்.டி.ஏ.டி. உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.



மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட ஜூடோ பயிற்சியாளர் முரளி போட்டிகளை துவக்கி வைத்தனர். கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஜெயக்கண்ணன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.  14 வயது, ஏழு எடை பிரிவில், 43 மாணவியர், 17 வயது மற்றும், 19 வயது, ஒன்பது எடை பிரிவில், 39 மற்றும், 29 பேர் என மொத்தம், 111 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள், மாநில போட்டிக்கு தேர்வாகினர். நடுவர்களாக அஸ்வின், ஷேக் முகமது, ஜனகராணி, பிரவீன்குமார், சிவா, அபிமன்யு ஆகியோர் செயல்பட்டனர்.

––

ஜூடோ போட்டியில் மோதிய மாணவியர்.

Advertisement