அரசு களப்பணியாளருக்குப் பாராட்டுச்சான்றிதழ்
திருப்பூர்: மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்து அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அமித் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணிபுரியும் செவிலியர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துாய்மை பணியாளர்கள், கிராம உதவியாளர், மின்வாரிய ஹேங்மேன், சத்துணவு உதவியாளர்கள் உள்பட அனைத்து துறை சார்ந்த களப்பணியாளர்கள் மொத்தம் 256 பேருக்கு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் பிரியாணியுடன் விருந்து பரிமாறப்பட்டது.
இன்று, நாட்டின் 80 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில், மாவட்ட வருவாய்த்துறை சார்பில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், அனைத்து அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்துவரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு, கலெக்டர் கையால் பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் களப்பணியாளர்களுக்காக விழா நடத்தி, பாராட்டு சான்று வழங்கிய மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
–––
2 படங்கள்
அரசுத்துறை களப்பணியாளருக்கு கலெக்டர் மனிஷ் நாரணவரே பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்; இதில் பங்கேற்ற அரசுத்துறை ஊழியர்கள், களப்பணியாளர்கள்.
மேலும்
-
கட்டுமான பணியில் ஆறு நிலைகளை அறிந்து செயல்படுங்கள்!
-
வீடு கட்டுவதற்கு நஞ்சை நிலத்தை வாங்குவது நல்லதல்ல!
-
கூட்டு குடும்பத்தின் பயன்பாட்டில் உள்ள சொத்தை வாங்கும் போது கவனிக்க…
-
போர்வெல் அமைக்கும்போது மழைநீர் சேகரிப்பில் கவனம் தேவை!
-
வீடுகளில் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகள்!
-
ஒயரிங் வழித்தடத்தில் பூச்சு வேலை செய்யும் போது கவனிக்க…