12.5% சுங்க வரிகளிலிருந்து விலக்கு; ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை பரிசீலிக்க டிரம்ப் சம்மதம்
சிட்னி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் சுங்கவரி விலக்கு கோரியதற்கு, பரிசீலிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்து உள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி உலக நாடுகள் மீது அதீத வரியை விதித்தார். அந்த வகையில், கட்டாய உழைப்பு தடுப்பு சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாத நாடுகளுக்கு 12.5 சதவீதமும், ஓரளவுக்கு விதிகளை பின்பற்றும் இந்தியா, ஐரோப்பிய யூனியன் போன்றவற்றுக்கு, 10 சதவீதமும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்தார்.
அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலிய பொருட்கள் மீது 12.5% சுங்கவரியை அமெரிக்கா விதித்தது. அமெரிக்கா விதித்த 12.5% வரியை முழுமையாக நீக்கக் கோரி அமெரிக்க அதிபர் டிரம்பை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கோரிக்கையை பரிசீலிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது: அமெரிக்காவின் நண்பன் என்ற ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன், எனது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அதிபரும் ஒப்புக்கொண்டார்.
வரி விதிப்பு விஷயத்தில் எங்களுக்கு வேறுபட்ட நிலைப்பாடு உள்ளது, என்றார். மேலும் சுதந்திரமான வர்த்தகம், மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகள் பற்றியும் இருநாட்டு தலைவர்களும் பேசினர்.
மேலும்
-
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
-
ஆடிப்பூரம் / திருவிளக்கு வழிபாடு
-
பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள்; அரசு பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்
-
திருட்டு சம்பவங்கள் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பாலப்பன்பட்டி மக்கள் வலியுறுத்தல்
-
அரசு களப்பணியாளருக்குப் பாராட்டுச்சான்றிதழ்
-
வலிமை பெற்ற வளை கரங்கள் ஜூடோவில் மாணவியர் அசத்தல்