மற்ற ஊர்காரங்க கேள்வியா கேப்பாங்க.. அதே ஊர்ல நடத்துப்பா கிராமசபைய!

சோமையம்பாளையம், ஆக. 15-

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உட்பட்டது சோமையம்பாளையம் ஊராட்சி. இதில் கஸ்தூரிநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், குப்பநாயக்கன்பாளையம், சுல்தானியபுரம், மருதமலை அடிவாரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

கிராமசபை கூட்டங்களை, ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சுழற்சி முறையில் நடத்த வேண்டும். ஆனால், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்திய காளப்பநாயக்கன்பாளையத்திலேயே ஆக.15 கிராம சபையையும் நடந்துகிறது.

மற்ற கிராமங்களில் நடத்தினால், பொதுமக்கள் குறைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், மீண்டும் மீண்டும் ஒரே கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்துகின்றனர். அனைத்தும் மக்களும் பயன்பெற வேண்டும் என்பதால், இந்த முறை வேறு கிராமத்தில் நடத்த வேண்டும் என மக்கள் மனு கொடுத்தனர்.

Advertisement