கிரிக்கெட் வீரர்கள் தேர்வுதேனியில் நாளை நடக்கிறது

தேனி, ஆக.15–தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 23 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை(ஆக.,16) கே.ஆர்.ஆர்., நகரில் உள்ள எம்.எம்.சி.எப்., வலைப்பயிற்சி மைதானத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விருப்ப முள்ள வீரர்கள் காலை 9:00மணிக்குள் வர வேண்டும். பங்கேற்க வரும் வீரர்கள் உரிய சீருடை, ஸ்போர்ட்ஸ் ஷீ அணிந்திருக்க வேண்டும். ஆதார், பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 98421 13434 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement