மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ.1.16 கோடியில் உதவி வழங்கல்
வானுார்: தொள்ளாமூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 196 பயனாளிகளுக்கு 1.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு கவுதம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘இந்த முகாமில், பல்வேறு துறைகள் சார்பில், 196 பயனாளிகளுக்கு 1.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பல்வேறு துறை சார்பில் மொத்தம் 1 கோடியே 16 லட்சத்து 1,992 மதிப்பீட்டில் அரசு கூடுதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் தங்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டத்தின் மூலம் நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள், துார்வாருவது, மழைநீரை சேமிப்பது தொடர்பாக அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
நிகழ்ச்சியில், ஆட்சியர் (வளர்ச்சி) ஆனந்தகுமார் சிங், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, தனித்துணை ஆட்சியர் காதர் அலி, விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஏகாம்பரம், ஊராட்சி தலைவர் கங்காகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
-
ஆடிப்பூரம் / திருவிளக்கு வழிபாடு
-
பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள்; அரசு பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்
-
திருட்டு சம்பவங்கள் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பாலப்பன்பட்டி மக்கள் வலியுறுத்தல்
-
அரசு களப்பணியாளருக்குப் பாராட்டுச்சான்றிதழ்
-
வலிமை பெற்ற வளை கரங்கள் ஜூடோவில் மாணவியர் அசத்தல்