பட்டு உலக பொழுது போக்கு பூங்கா வண்ண ஓவியங்களுடன் அசத்தல்

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பட்டு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குன்னுார்–- கோத்தகிரி சாலை ‘ஸ்பிரிங் பீல்டு’ பகுதியில், பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான இடத்தில், பட்டு உலகம் எனும் புதிய பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், ‘மல்பெரி செடி வளர்ப்பு ; பட்டு முட்டையிலிருந்து புழுக்கள் உருவாவது; நூல் பிரித்தெடுத்தல் மற்றும் நெசவு செய்வது,’ என, அனைத்து நிலைகளும் பூங்கா சுவர்களில் தத்ரூபமான வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பட்டு புழுக்கள் மற்றும் பட்டுக்கூடுகளின் நேரடி கண்காட்சியும், குழந்தைகள் விளையாடும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘குன்னுார் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இதனையும் பார்வையிட்டு செல்ல வேண்டும்,’ என்றனர்.

Advertisement