போர்வெல் அமைக்கும்போது மழைநீர் சேகரிப்பில் கவனம் தேவை!
சொத்து வாங்க வேண்டும் என்று நினைப்போர் காலிமனை வாங்கி அதில் வீடு கட்டி வசிக்க நினைக்கின்றனர். இதற்கான பணிகளை துவங்கும் நிலையில் எந்த வேலையை எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதில் திட்டமிட்டு, கவனமாக செயல்பட வேண்டும்.
ஒரு காலத்தில் நிலம் வாங்கினால், அதில் நீரோட்டம் பார்த்து கிணறு தோண்டுவது வழக்கமா இருந்தது. ஆனால், தற்போது திறந்த வெளி கிணறு தோண்டு வதை விடுத்து மக்கள் போர்வெல் போன்ற வழி முறைகளை பயன்படுத்த தயாராகிவிட்டனர்.
இதனால், சமீப காலமாக கிணறுகள் தோண்டப்படுவது படிப்படியாக குறைந்து, போர்வெல் அமைப்பது அதிகரித்துள்ளது. இந்த வகையில், வீட்டுக்கான போர்வெல் அமைக்கும் போது, பெரும்பாலானோர் மழைநீர் சேகரிப்பு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை.
உங்கள் வீட்டுக்கான நிலத்தில் போர்வெல் அமைக்கும் முன் அங்கு நீரோட்டத்தின் நிலை என்ன, எவ்வளவு ஆழத்தில், எத்தகைய தண்ணீர் கிடைக்கிறது என்று பாருங்கள். இதில், அக்கம் பக்கத்தில் உள்ள நிலங்களில் எவ்வளவு ஆழத்தில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.
குறிப்பாக, 100 அடி ஆழத்துக்கு மேல் போர்வெல் அமைப்போர் குறிப்பிட்ட சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போர்வெல் அமைக்கப்பட்ட இடத்தை சுற்றி, 3 அடி சுற்றளவுக்கு, தரை மட்டத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்ட வேண்டும்.
இதில் கரி துண்டுகள், கருங்கல், மணல் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் அடுக்கு முறையில் கொட்ட வேண்டும். உங்கள் நிலத்தில் பெய்யும் மழைநீர் அனைத்தும் இந்த பள்ளத்துக்கு வருவதற்கு ஏற்ற வழித்தடத்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால், மழைநீர் வடிகட்டப்பட்டு நிலத்துக்குள் செல்லும் நிலை ஏற்படும். இதனால், அந்த போர்வெல்லில் எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கோடைகாலத்தில் தொடர்ந்து தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
போர்வெல் அமைக்கும் போது இத்தகைய மழைநீர் சேகரிப்பு வழிமுறைகளை கடைபிடித்தால், அங்கு போர்வெல்லை சுற்றி மேல் மட்ட ஊற்றுகள் தொடர்ந்து செயல்பட வழி ஏற்படும். இதனால், போர்வெல் உட்புறத்திலும், பக்கவாட்டில் இருந்து தண்ணீர் ஊற்றுகள் தொடர்ந்து தண்ணீர் கொடுக்கும்.
குறிப்பாக, அக்கம் பக்கத்தில் நிலத்தில் ஏற்படும் கழிவுகள், மாசு காரணமாக, உங்கள் வீட்டு போர்வெல்லில் தண்ணீர் தரம் பாதிக்காமல் இருக்கும். குறிப்பாக, தண்ணீரின் சுவை எப்போதும் போன்று ஒரே நிலையில் இருப்பது உறுதி செய்ய வழி ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
போர்வெல் அமைக்கும் போது மழை நீர் சேகரிப்பு மற்றும் மழை நீர் செரிவூட்டல் வழிமுறைகளை கடைபிடித்தால், அங்கு நிலத்தில் மேல் மட்ட ஊற்றுகள் தொடர்ந்து செயல்பட வழி ஏற்படும்.
மேலும்
-
தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்ற அரசு செயல்படுகிறது; முதல்வர் விஜய் உரை
-
பார்லிமென்ட் கூட்டுக்குழு
-
மின்விசிறி சுழலும் விதம்
-
கையில் தேசியக்கொடியை ஏந்தி 3:29 மணி நேரம் மிதந்த மாணவி
-
2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்; டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி