செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 5வது, கடைசி தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் 'சின்க்யுபீல்டு' கோப்பை தொடராக நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று நான்காவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரீஸ்ட் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 13வது நகர்த்தலில் இருந்து முன்னிலை பெற்றார். முடிவில் 71வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்ற நான்கு போட்டிகளும் 'டிரா' ஆகின.
நான்கு சுற்று முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே (3.0), பிரான்சின் வாசியர் (2.5), அமெரிக்காவின் ஆரோனியன் (2.5), பிரக்ஞானந்தா (2.5) 'டாப்-4' இடத்தில் உள்ளனர்.
மேலும்
-
காங்., தலைவரை இழிவுபடுத்திய விவகாரம் மாநில தலைவர் வைத்திலிங்கம் கண்டனம்
-
என்று தணியும் இந்திய ஹாக்கி தாகம்... * தீருமா 51 ஆண்டு உலக கோப்பை ஏக்கம்
-
600வது டெஸ்டில் அசத்துமா இந்தியா... * இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை
-
இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்
-
கெங்கை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
-
திண்டுக்கல் அணி கலக்கல்: சேலம் அணியை வென்றது