கெங்கை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா

புதுச்சேரி: சாரம் கெங்கை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடந்தது.

இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆடிப்பூர விழாவையொட்டி, பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

Advertisement