அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
குளித்தலை:கடவூர் வட்டம் பாலவிடுதி
வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள சிங்கம்பட்டி கஸ்துாரிபட்டி
பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 3.52 ஏக்கர் நிலம், முள்ளிப்பாடி
கன்னிமார் கோவில் உள்ளிட்ட, 8 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பொது
ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்த ஏலம் நேற்று
நடந்தபோது, இதையறிந்த பாலவிடுதி கிராம மக்கள், விவசாயிகள் மற்றும்
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஒன்று கூடி, பாலவிடுதியில்
ஹிந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, அனைத்து கோவில்
நிலங்களையும், பொது ஏலம் விட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதில்
கூறியிருப்பதாவது: தனி நபர் ஆக்கிரமித்துள்ள கோவில்களுக்கு
சொந்தமான நிலங்களையும் பொது ஏலத்திற்கு கொண்டு வரவேண்டும். இதேபோல்,
தர்மகர்த்தா கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து, கோவில்
திருப்பணி உள்பட அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்து உள்ளனர்.
இந்த
மனுவை பெற்றுக்கொண்ட, ஹிந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர்
விஜயபூபதி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து
நேற்று நடைபெற இருந்த பொது ஏலம் ரத்து செய்யப்பட்டது.
மேலும்
-
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகள், புதர் மண்டிய நீர்வரத்து ஓடைகள் சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
-
அரசு தேங்காய் கொள்முதல் செய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை
-
கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
-
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தினம்
-
அரிஸ்டோ பள்ளியில் சுதந்திர தினம்
-
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினம்