தொழில் வர்த்தக மாநாடு மதுரையில் துவங்கியது
மதுரை:சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் ‛சிட்கான் 2026' தொழில் வர்த்தக 2 நாள் மாநாடு மதுரை காமராஜர் ரோடு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் துவங்கியது.
டாட்காம் இன்போவே நிறுவன முதன்மை செயல் அதிகாரி வெங்கடேஷ் ராஜேந்திரன், கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி கவுன்சில் செயலாளர் கணேஷ் ஆகியோர் தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றம் குறித்து பேசினர். சவுபாக்கியாஸ் நிறுவனம் சார்பில் வைர நகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாநாட்டு வர்த்தக மலரை எம்.எல்.ஏ., கோபிசன் வெளியிட்டார். இட்காட் அமைப்பு முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேஸ்வரன், சமூக சேவகர் சசிதரன் பங்கேற்றனர்.
சிறந்த தொழில் முனைவோருக்கான ஸ்டார் விருது சேதுராம், உத்யோக சேவா ரத்னா விருது கலாதர் பாபுவிற்கு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சுரேந்திரன், பாஸ்கர் பேசினர்.
இன்று (ஆக., 16)அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார், கீர்த்தனா, சிறப்பு பேச்சாளர்கள் ஸ்ரீனிவாசன், வழக்கறிஞர் சுமதி, பேராசிரியர் விஸ்வநாத் பேசுகின்றனர். உலக அளவில் பல்துறை சவுராஷ்டிரா சாதனையாளர்களுக்கு பி.வி.கே.குழுமம் சார்பில் இளவல் ராமகிருஷ்ணன் விருது வழங்குகிறார். சேம்பர் நிர்வாகிகள் தினேஷ், குமரேஷ் பாபு, ராம்லக்ஷ்மண்ஜி, குபேந்திரன், சூரியபிரகாஷ், தினகரன், சவுராஷ்டிரா நெக்ஸ்ட்ஜென் தலைவர் பிரேம் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை