மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
மதுரை: மதுரையில் 'பார்க்கிங்' பிரச்னை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை 55, போலீஸ் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் சிவனடியார் பரமசிவம். இவரது வீட்டருகே வசிக்கும் வாலகிருஷ்ணன், மாலதி தம்பதியுடன் ஜூலை 17ல் வாகனத்தை 'பார்க்கிங்' செய்வதில் பிரச்னை ஏற்பட்டதில் பரமசிவத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறுநாள் வீடு திரும்பினார்.
ஜூலை 19ல் வீட்டிற்கு வந்த போலீசார், விசாரிக்க வேண்டும் என்று கூறி பரமசிவத்தையும், மனைவி அய்யம்மாளையும் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் தலையில் உள்காயம் ஏற்பட்டதாக கூறி தொடர் சிகிச்சையில் இருந்த பரமசிவம், நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் இறந்தார். போலீஸ் அடித்ததாலேயே கணவர் இறந்ததாக மனைவி அய்யம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷூ காலால் தாக்கினர் இதுகுறித்து முதல்வர் விஜய், மதுரை கலெக்டருக்கு அவர் அனுப்பியுள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் முன்னிலையில் எஸ்.ஐ., ஜெய்குமார், போலீஸ்காரர் ஆனந்த் உட்பட 4 பேர் 'விசாரிக்க நைட் கூப்பிட்டா வரமுடியாதா' எனக்கூறி ஷூ காலால் கணவரின் தலையில் ஓங்கி உதைத்தனர். இதில் மயங்கிய கணவரை போலீசாரே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்துவிட்டு மீண்டும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
மிரட்டல் விடுத்த போலீசார் 'இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது' என மிரட்டினர். நாங்களும் பயந்துபோய் சொல்லமாட்டோம் எனக்கூறி வீட்டுக்கு வந்தோம். இந்நிலையில் நாங்கள் '100'க்கு போன் செய்ததை அறிந்த இன்ஸ்பெக்டரும், தாக்கிய 4 போலீசாரும், 'மீண்டும் '100'க்கு போன் செய்து எந்த பிரச்னையும் இல்லை என தெரிவிக்க வேண்டும்' என மிரட்டினர்.
அதன்படி நாங்களும் தெரிவித்தோம். இதன்பிறகு என் கணவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தலைவலியால் துடித்தார். ஆக.8ல் மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தபோது தலையில் ரத்தக்கசிவு இருப்பதால் காப்பாற்றுவது சிரமம் என்று டாக்டர்கள் கூறினர்.
அப்போது போலீஸ்காரர் அப்துல்முகமது நேரில் வந்து 'டிஸ்சார்ஜ்' ஆகிவிடுமாறு மிரட்டினார். நாங்களும் பயந்துபோய் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆக.11ல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கும் கணவரை காப்பாற்றுவது கடினம் என்றனர். இதற்கெல்லாம் காரணமான இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 4 பேர் மீதும், மருத்துவமனைக்கு வந்து மிரட்டிய போலீஸ்காரர் அப்துல்முகமது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமசிவம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.
@block_B@
எஸ்.ஐ., உட்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தொடர் சிகிச்சையில் இருந்தபோது பரமசிவம் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதில், நான் எந்த தப்பும் செய்யவில்லை. அடிதடி பிரச்னை என்று கூறி, காசு வாங்கிக்கொண்டு போலீசார் விசாரணையின்போது வேண்டுமென்றே என் மண்டையில் அடித்ததில் ரத்தம் உறைந்துள்ளது. வாந்தி வாந்தியாக வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஒன்றால் அந்த 5 பேரும்தான் காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.block_B
திருச்சபை ஆட்சில நியாயம் கிடைக்குமா .....இறந்தது இதுவே சிறுபான்மையினரா இருந்தா இந்நேரம் களேபரம் ஆகி ஆட்சிக்கே ஆபத்தா போயிருக்கும் ...போனது நம்ம உயிர் ....ஒரு பக்கியும் நம்மள ஏன்னு கேக்க நாதியற்ற மதம் நம் மதம்தான். நம் எண்ணம் எப்படியோ அப்படிதான் ஆட்சியாளர்களும் வருவார்கள் ...இதுவே வடநாடா இருந்திருந்தா கதையே வேற ...நாமதான் அங்காளி பங்காளியாச்சே
அவர் கிருத்துவராக அல்லது இஸ்லாமியராக இருந்தால் இந்நேரம் 100 பதிவுகள் வந்திருக்கும். அவர் ஒரு இந்து, சிவனடியார் வேறு. யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுதான் திராவிடமும் டாஸ்மாகும் தமிழர்களுக்கு காட்டிய வழி
உங்க பையன் விஜய் எங்கம்மா போனாரு? புரிந்தவன் புத்திசாலி .மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி