பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
பாட்னா: பீஹாரில் உள்ள அசோக் தாம் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
சவான் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையையொட்டி, லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த மின் வயர் அறுந்து விழுந்ததால், பக்தர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவில் நிர்வாக அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு