காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்னையில் இரு இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுநெல்லி கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி 3 நாட்கள் நடக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாள் திருவிழாவான நேற்றைய தினம், சுவாமி ஊர்வலத்தின் போது, சிலர் மதுபோதையில் ஒலிபெருக்கியில் கானா பாடல் போடுமாறு கேட்டுள்ளனர். இதற்கு அங்கிருந்த சிலர் மறுத்துள்ளனர். இதனால், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
உடனே இது குறித்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அந்தக் கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர், மீண்டும் வந்து போதை கும்பல், சந்துரு மற்றும் விக்கி என்பவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடியுள்ளது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை நடத்தினர்.
அப்போது, உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்காததே இந்தக் கொலைக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; மானிய கோரிக்கை மீது அனல் பறக்கும் விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு