11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்!
சென்னை: 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், 'என்ரிகா' நிறுவனத்தின், 11 மது வகைகளை விற்க விதிக்கப்பட்ட தடை, ஒரே நாளில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன. அப்படி, 'என்ரிகா எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் மது வகைகளில், செயற்கை சுவையூட்டும் பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அந்த நிறுவனத்தின், 11 மது வகைகள் விற்பனைக்கு, மதுக்கடைகளில் தடை விதித்து, டாஸ்மாக் மேலாண் நந்தகுமார், கடந்த, 13ம் தேதி உத்தரவிட்டார். இந்த தகவல் நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு ஆணைய கடிதத்தின் அடிப்படையில், என்ரிகா நிறுவனத்தின், 11 மது வகைகளை டாஸ்மாக் கடைகளில் விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க, மது விலக்கு துறை ஆணையர், நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த தகவல் நேற்று வெளியானது.
ஒரே நாளில் மது வகைகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில்,'விதித்த தடையை வெறும், 24 மணி நேரத்தில் நீ க்கும் அளவிற்கு, அப்படி என்ன நடந்தது. பயமா, பதற்றமா, பேக்கரி டீலிங்கா. என்னவா இருக்கும்' என்று கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தனியார் நிறுவனத்தில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரிகள், 'தங்களில் ஆய்வின் அடிப்படையில், 11 மது வகைகளுக்கு தடை விதிக்கவும்' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறைக்கு சுற்றறிக்கை அனுப்பினர். அதை, டாஸ்மாக்கிற்கு வழங்கி, அந்த மது வகைகளை விற்கக்கூடாது என, தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ஆணையம், 'ஆராய்ந்து பார்த்ததில், சுவையூட்டி இயற்கையாக உருவாக்கப்படுகிறது. அந்நிறுவனத்திடம் மது வகைகளை வாங்கலாம்' என, கடிதம் அனுப்பியது. அது, டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்டது.
தினமும், 50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, மத்திய அரசு தான் கண்காணிக்கும். மாநில அரசு கண்காணிக்க முடியாது. தமிழக அரசு, மதுபான ஆலைகளில், மது வகைகளில் எவ்வளவு ஆல்கஹால் கலக்கப்படுகிறது என்று தான் ஆய்வு செய்யும். இந்த புகார் வந்ததை அடுத்து, ஆய்வில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு யாரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது. காழ்ப்புணர்ச்சியுடன் எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுக்காமல், நடுநிலையுடன் பார்க்க வேண்டும். 'ஆன் லைன்' விற்பனையில், மது வாங்குவோருக்கு, மது தராத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (26)
ஊர்குருவி - chennai,இந்தியா
16 ஆக்,2026 - 19:32 Report Abuse
ஒட்டு மொத்த நாட்டளவில் மக்களுக்கு எதிரான ஒரு பெரிய ஏமாற்றுவேலை நடக்கின்றது .அதை நீதிமன்றம் செயகின்றதா அல்லது ஆட்சி செய்யும் அரசுகள் செயகின்றதா என்றுதான் தெரியவில்லை .அரசியலமைப்பு சட்டம் பிரிவு 47இல் சொல்வது "The State shall regard the raising of the level of nutrition and the standard of living of its people and the improvement of public health as among its primary duties and, in particular, the State shall endeavour to bring about prohibition of the consumption except for medicinal purposes of intoxicating drinks and of drugs which are injurious to health." இதற்க்கு அர்த்தம் என்ன என்று அதிகாரவர்கங்களுக்கு தெரியவில்லையா ?ஒருவேளை காலத்தின் தேவை என்று கருதினால் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அல்லவா செய்திருக்கவேண்டும் .சட்டத்திற்கு புறம்பாக மாநிலங்கள் சாராயம் விற்கலாம் என்று தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்ற்கு எந்த சட்டத்தின் மூ லம் வழங்கப்பட்டிருக்கின்றது .மதிய அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு மௌன அஞ்சலி செலுத்திடுவது ஏன் ?சட்டமீறல் எங்கு நடந்தாலும் அதை சீர் செய்யும் கடமை மதிய அரசுக்கு இல்லையா ? மாநிலங்கள் எல்லாம் சாராயம் விற்பது ஊழலில் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே என்பதை அரசியல்வாதிகளின் கடந்தகால சிறைவாசம் உறுதிப்படுத்தவில்லையா ?மதிய அரசு உடனடியாக நீதிமன்றம் சாராயவிற்பனைக்கு அதிகாரம் வழங்கும் தீர்ப்பின் மறுபரிசீலனைக்கு நடவடிக்கை எடுத்து சட்டத்தின் 47 வது பிரிவில் மாற்றங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிய மைக்கவேண்டும் . 0
0
Reply
VSMani - ,இந்தியா
16 ஆக்,2026 - 17:50 Report Abuse
மக்கள் பணத்தை தொட மாட்டோம் தொடவும் விடமாட்டோம் தொட்டவர்களையும் விடமாட்டோம் எல்லாம் வீர வசனங்களும் வெட்டி பேச்சுக்கள்தான், ஒரே நாளில் லாட்டரி மருமகனுக்கு பணம் கோடிகளில் குவிந்திருக்கும் உடனே 11 மது வகைகள் மீதான தடை நீங்கி இருக்கும். எல்லாம் ஊழல் காட்சிகள் தான். 200 கோடி சம்பளத்தை விஜய் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தது என்ன சும்மா சேவை செய்யவா ? மாதம் 2000 கோடி சம்பாதிக்கத்தான். 0
0
Reply
M.Selvam - Chennai/India,இந்தியா
16 ஆக்,2026 - 16:53 Report Abuse
மக்கள் ஒன்றை தெளிவாக அறிய வேண்டும் .. போதை தரும் பொருட்களில் டாஸ்மாக் மது சேரவே சேராது …அது ஆரோக்கியம் உடல்பலம் ஆயுள் அதிகரிப்பு தர வல்லது .. அப்புறம் என்ன அலப்பறை 0
0
Reply
அன்பே சிவம் - ,
16 ஆக்,2026 - 15:45 Report Abuse
1). தங்கம் ஒரே நாளில் பல் இழித்து தகரம் ஆன கதை இதுதான்.
2). இலங்கை தமிழர் உண்ணாவிரததில் கட்டுமரம் செய்த தில்லாலங்கடியை விட படே பெரிய கில்லாடியான நிர்வாகம்.
3). ஸ்டாலின் தாத்தா போல் மேல் நோக்கி கையை (மத்திய அரசை)காட்டி தப்பித்து கொள்வதிலும் சரி.
4). மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த ரீல் ரொம்ப நாள் ஓடாது. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
16 ஆக்,2026 - 12:01 Report Abuse
திமுகவை பின்னுக்கு தள்ளி வெகு உக்கிரமாக குருவை மிஞ்சிசின சிஷ்யனைபோல் வெற்றி மாடல் என்ற மாற்றத்துடன் பழைய ஆட்சி தொடர்கிறது பெரயர் மாற்றத்தை சாதியப்படுத்திய அந்த 34% அறிவார்ந்த பெருமக்களுக்கு நன்றி. . 0
0
Reply
N. Ramachandran - Bangalore,இந்தியா
16 ஆக்,2026 - 11:41 Report Abuse
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் அரசுகள், டாஸ்மாக் TASMAC எனும் அரசு நிறுவனம் மூலம் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவை IMFL விற்பனை செய்து, மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருவாய் ஈட்டுகின்றன. அரசின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல ஏனெனில், தங்கள் வருமானத்தை மதுவிற்காகச் செலவழிக்கும் மக்கள், தங்கள் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் ஒரு சுமையாக மாறுகின்றனர். மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, அரசு அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அரசு நிறைவேற்றுமா அல்லது மக்களை குடிக்கவைத்து கொல்லுமா என்று போக போக தெரியும்... 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
16 ஆக்,2026 - 10:58 Report Abuse
தினமும், 50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, மத்திய அரசு தான் கண்காணிக்கும். மாநில அரசு கண்காணிக்க முடியாது. இதுகூட தெரியாமதான் தடைவிதித்தீர்களா? முறைப்படி மத்திய அரசுக்குத்தானே புகாரளித்திருக்கவேண்டும் அவசர அவசரமாக தடை விதித்து அதே வேகத்தில் விளக்கி கொள்ளப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 0
0
Reply
prakash - ,இந்தியா
16 ஆக்,2026 - 10:50 Report Abuse
கவெக தமிழக தோல்வி கழகம் 0
0
Reply
c.mohanraj raj - ,
16 ஆக்,2026 - 10:17 Report Abuse
இதை என்ன சொல்வது கழுதை தேய்ந்து தான் கட்டெறும்பாகும் இது தேயாமலேயே ககட்டெறும்பு ஆகிவிட்டது 0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
16 ஆக்,2026 - 09:45 Report Abuse
இப்பிடியா எங்கள் ராஜதந்திரங்களை போட்டு உடைப்பது. தடை என்ற செய்தியை மட்டும் போடவேண்டியதுதானே, 5 நிமிஷம் தடை பண்ணினோம் ரீல்சுக்காக 0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
-
80வது சுதந்திர தினம்; கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கவாழ் இந்தியர்கள்
-
தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க டிரம்ப் உத்தரவு
-
அரவிந்தரின் 154வது பிறந்த நாளையொட்டி கலாசார மையத்தில் ஓவிய கண்காட்சி
-
நான் ஒரு 'அறிவுசார் நக்சலைட்': காங்., 'மாஜி' சிதம்பரம் பெருமிதம்
-
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
-
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்
Advertisement
Advertisement