மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.


சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்
களை பிடித்துக்கொண்டு வந்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.இதில் ஜிலேபி மீன் ஒரு கிலோ, 150 ரூபாய், கெண்டை, 120 ரூபாய், கொக்கு மீன், 230 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். விடுமுறை தினம் என்பதால், மீன் விற்பனை தீவிரமாக நடந்தது.

Advertisement