அரவிந்தரின் 154வது பிறந்த நாளையொட்டி கலாசார மையத்தில் ஓவிய கண்காட்சி
வானுார்: ஆரோவில் மோகன கலாசார மையத்தில், 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ஓவிய கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் மோகன கலாசார மையம் அமைந்துள்ளது. இங்கு கிராமிய கலாசாரம், பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு நடனம், ஓவியம், களிமண் மூலம் பொம்மை தயாரித்தல் மட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து இளைய தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறது.
இந்த மையத்தில், நேற்று ஸ்ரீ அரவிந்தரின் 154வது பிறந்த நாள் விழா மற்றும் மோகன கலாசார மையத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 'புதிய மனிதத்துவத்தின் தரிசனம், மனித பரிணாம வளர்ச்சி மற்றும் அதிமன உணர்வு குறித்த ஸ்ரீ அரவிந்தரின் பார்வை' என்ற தலைப்பில் சிறப்பு பண்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, தமிழ் கவிஞர் மீனாட்சி, ஆர்யாஜ் சிற்ப கலை நிர்வாகி கருணாகரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓவிய கண்காட்சியும், பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
ஓவிய கண்காட்சியில், ஓவியர்கள் பங்கேற்று கண் கவர் ஓவியங்கள், இயற்கை காட்சிகள், மன அமைதியை ஏற்படுத்தும் விதமான ஓவியங்களை வரைந்து அசத்தினர்.
கண்காட்சியை ஆரோவில்லில் வசிக்கும் வெளிநாட்டினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து 25 ஆண்டுகளாக பயணித்து வரும், மோகன கலாசார மையத்தின் வளர்ச்சிக்கு துணை நின்ற முக்கியஸ்தர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை மோகன கலாசார நிர்வாகிகள் பாலசுந்தரம், ராஜவேணி செய்திருந்தனர்.
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி