தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன்: ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சிகளில் அமெரிக்காவுடன் இணைவதற்கான தனது கோரிக்கையை தென் கொரியா நிராகரித்துவிட்டது; இந்த சூழலில், தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நான் கொண்டுள்ள மிகச் சிறந்த உறவின் அடிப்படையில் பார்க்கையில், தென் கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே ஒப்புக்கொண்டிருந்ததில் எனக்கு உடன்பாடில்லை.
இப்பயிற்சிகள் அதிக செலவு பிடிக்கக்கூடியவை; வழக்கம் போலவே, இந்தச் செலவில் பெரும்பகுதியை அமெரிக்காவே ஏற்கிறது. தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளைப் பெருமளவில் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இப்பயிற்சிகளை ரத்து செய்வதற்கு ஏற்கனவே காலதாமதமாகிவிட்ட சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்திடம் நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஈரானிடம் இருந்து அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையில் எங்களுடன் இணைய விருப்பமா என்று சமீபத்தில் தென் கொரிய அதிபரிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், "வேண்டாம், நன்றி!" என்று பதிலளித்தனர். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சியில் சேருவதை தென் கொரியா நிராகரித்தது அதிபர் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை; திமுக- தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
-
விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
-
மேற்குவங்கத்தில் சோகம்; ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி பலி
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி