நான் ஒரு 'அறிவுசார் நக்சலைட்': காங்., 'மாஜி' சிதம்பரம் பெருமிதம்
- நமது நிருபர் -
'நான் ஒரு அறிவுசார் நக்சலைட் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்' என, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டில்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தின விழாவில், தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், 'அதிகார மையங்களில் நக்சல் சிந்தனை கொண்ட பலர், பல ஆண்டுகளாக உள்ளனர். முன்னர், அரசின் முக்கிய குழுக்களில் ஆலோசகர்களாக இருந்த அவர்களின் நக்சல் சிந்தனை, அப்போதைய அரசுகளின் கொள்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
'வனப்பகுதிகளில் இருந்த ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்து விட்டோம். ஆனால், நக்சல் மூளையுடன், நாட்டில் வன்முறை மற்றும் அமைதியின்மையை உருவாக்கும் வாய்ப்புகளை தேடுபவர்கள் இன்னும் உள்ளனர்.
'நக்சல் சிந்தனை கொண்ட அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்' என பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தன் சமூக வலைதள 'எக்ஸ்' பக்கத்தில், 'நான், சிந்தனை ரீதியான அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்., கூட்டணி அரசில், மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தார்.
உள்துறை என்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பொறுப்பை கொண்ட இலாகா.
அதன் அமைச்சராக கடந்த 2008 - 2012 வரை இருந்த சிதம்பரம், தன்னை 'அறிவுசார் நக்சலைட்' என கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நக்சலைட் என்பவர் ஒரு கோட்பாடு மற்றும் ஊழலற்ற... ஆனால் வன்முறையான நோக்கம் கொண்டவர்கள். சிதம்பரம் அடிப்படையில் மிகப்பெரிய ஊழல்வாதி... கொள்கையற்றவர்... வடிவேல் போல நானும் நக்சலைட் என்று ஜீப்பில் ஏறுகிறார். நீதான் 2006 இல் நக்சலைட்டுக்கு பாடம் எடுத்தாய்.. நியபாகம் இருக்கிறதா?...
நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு ஒரு தலைகுனி. நீங்க ஒரு தேச துரோகி. நீங்க ஒரு இழி பிறவி.
இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அச்சுக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியபோதே தெரியும் இவரது புத்தி.
அறிவே இல்லாத நெக்ஸாலிடே எனலாம்
அரசியல் வியாதி உளறுகிறது.
எங்க அப்பன் புதிருகுள்ள இல்லை என்று சொல்வது போல் இருக்கு. அப்போ காங்கிரஸ் பாதிபேர் நக்சல் என்று ஓத்து கொள்காறாரா சிதம்பரம்
இவரை எங்கயோ பார்த்த ஞாபகம் வருது,
நக்ஸலைட் என்று தெரியும் ஆனால் அறிவுசார் னு சொல்லுவது ரொம்பவே ஜாஸ்தி சிதம்பரம்.
தான் ஒரு அறிவாளி என்று வலிய வந்து பிரகடனப்படுத்தி கொள்கிறார். மற்றபடி இவருக்கும் நக்ஸலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர் ஒரு சுகபோக சந்தர்ப்பவாதி.
அரசியல் கழிசடைகள் அப்படிதான் சொல்லிக்கும்...உங்க வண்டவாளத்தை தான் டிவிஎஸ் மணி அவர்கள் தண்டவாளம் ஏத்திட்டாரே ....நீங்க எல்லாம் ஒரு இந்தியனா ?மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை