பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது
புதுடில்லி: காஷ்மீரில், பதுங்குமிடத்தை நோக்கி முன்னேறியபோது பயங்கரவாதிகளால் சுடப்பட்ட இந்திய ராணுவ மோப்ப நாய் டைசனுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்தின் 2 பாரா ஸ்பெஷல் போர் பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் மோப்ப நாய் டைசன். போர்க்களத்தில் காட்டும் வீரத்தையும் தகுதியான சேவையையும் அங்கீகரிக்கும் அதிகாரப்பூர்வ இராணுவப் பாராட்டு விருதான எம்.ஐ.டி-க்கு (MiD) தேர்ந்தெடுக்கப்பட்ட 89 வீரர்களில் ராணுவ நாய் டைசனும் ஒன்று.
இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது டைசன் படைகளுக்கு முன்னால் சென்று, மறைந்திருந்த பயங்கரவாதிகளின் மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்தது.
தேடுதல் வேட்டையின் போது காலில் குண்டு காயம் ஏற்பட்ட போதிலும், சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி டைசன் தனது துணிச்சலை வெளிப்படுத்தியது. இந்தச் துணிச்சலான செயலால் பாதுகாப்புப் படையினருக்குத் துல்லியமான தகவல் கிடைத்து, பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மோப்ப நாய் டைசனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டைசனுக்கு தற்போது சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஐந்தறிவு ஜீவனுக்கு இருக்கும் நாட்டுப்பற்று கூட இங்கிருக்கும் ஆறறிவு ஜெவனுக்கு கிடையது , சலூட் டு டைசன் தி கிரேட்
இந்த நாய்க்கு இருக்கும் நன்றியுணர்வு கூட..
இங்கே இருந்து கொண்டு.... நமது நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் சில ஜந்துக்களுக்கு இருப்பதில்லை.
அருமை வாழ்க பல்லாண்டு டைசன் A great Salute to our Tyson
இந்த 5-அறிவு பெற்ற விலங்கினத்திற்கு இருக்கும் நாட்டுப் பற்று, கரப்பாண்பூச்சி அளவுக்குச் சென்றுவிட்ட எதிர் காட்சியாளர்கள் திராவிட கட்சி உட்பட பலருக்கு இல்லை. சற்றே கவலையாகத்தான் உள்ளது.
வீரமிகு தீரன் டைசனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .ஜெய் ஹிந்த்
டைசனுக்கு வாழ்த்துகள்
அறிவுள்ள நன்றியுள்ள ஜீவனுக்கு விருது கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி
ஐந்து அறிவு ஆனால் தைரியத்தில் எத்தனையோ படி மேலே வாழ்த்துக்கள்.
நாயகன் வாழ்க.மேலும்
-
80வது சுதந்திர தினம்; கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கவாழ் இந்தியர்கள்
-
தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க டிரம்ப் உத்தரவு
-
அரவிந்தரின் 154வது பிறந்த நாளையொட்டி கலாசார மையத்தில் ஓவிய கண்காட்சி
-
நான் ஒரு 'அறிவுசார் நக்சலைட்': காங்., 'மாஜி' சிதம்பரம் பெருமிதம்
-
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
-
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்