வெற்றி பெற போகிறோம்; தொப்பி போட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர், 'டிரம்ப் 2028' எனக் குறிப்பிடப்பட்ட தொப்பி அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 2017ல் நடந்த அதிபர் தேர்தலில் வென்று, அந்நாட்டின் 45வது அதிபராக பதவியேற்றார். அடுத்த 4 ஆண்டுக்குப் பின் நடந்த பொதுத் தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வி அடைந்தார். மீண்டும் , 2025ல் நடந்த தேர்தலில் வென்று, இரண்டாவது முறையாக அதிபர் ஆனார் டிரம்ப்.
அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. இதனால் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.
இருந்தாலும் நிருபர்கள் கேள்விக்கு, ''எனக்கு மிகவும் விருப்பம் தான். 2028ல் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை உள்ளது'' என தனது விருப்பத்தை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அமெரிக்க அதிபர், 'டிரம்ப் 2028' எனக் குறிப்பிடப்பட்ட தொப்பி அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"நாங்கள் வெற்றி பெறப் போகிறோம்" என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவு, அவர் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறாரோ என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இது அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் மூன்றாவது முறையாகப் போட்டியிடக்கூடும் என்ற யூகங்களை மீண்டும் கிளப்பியுள்ளார்.
மேலும்
-
80வது சுதந்திர தினம்; கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கவாழ் இந்தியர்கள்
-
தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க டிரம்ப் உத்தரவு
-
அரவிந்தரின் 154வது பிறந்த நாளையொட்டி கலாசார மையத்தில் ஓவிய கண்காட்சி
-
நான் ஒரு 'அறிவுசார் நக்சலைட்': காங்., 'மாஜி' சிதம்பரம் பெருமிதம்
-
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
-
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்