திறந்த நிலை யோகாசன போட்டி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் 39வது தமிழக மாநில யோகாசன சாம்பியன் போட்டிக்கான மாவட்ட அணி தேர்வு மற்றும் திறந்த நிலை யோகாசன போட்டி நடந்தது.

விழுப்புரத்தில் நடந்த போட்டிக்கு, தமிழ்நாடு யோகாசன சங்க பொதுச்செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தனர்.

காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை திறந்த நிலை மாவட்ட யோகாசன போட்டியும், காலை 11:30 மணி முதல் மாலை 4:15 மணி வரை விழுப்புரம் மாவட்ட அணி தேர்வும் நடந்தது. ஏரளாமானோர் பங்கேற்று, யோகாசனம் செய்தனர்.

Advertisement