கத்தரிக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் விளைந்த கத்தரிக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, நடுகோட்டை, மூணாண்டிபட்டி உட்பட வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பல கிராமங்களில் கத்தரிக்காய் சாகுபடி உள்ளது.
இறவை பாசன நிலங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடவு செய்த கத்தரிக்காய் தற்போது பலன் தரும் நிலையில் உள்ளது.
கடந்த சில வாரங்களாக கத்தரிக்காய் விலை ஏறு முகமாகவே உள்ளது. வறட்சியால் கத்தரிக்காய் சாகுபடியை சில விவசாயிகள் தவிர்த்துள்ளனர். இந்நிலையில் விளைந்த கத்தரிக்காய் தற்போது கிலோ ரூ.40க்கு மேல் விற்பனை யாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடுகோட்டை விவசாயி சுருளிவேல் கூறியதாவது: நடவு செய்த 60 நாளில் செடிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை காய்கள் பறிக்க முடியும்.
ஒரு ஏக்கரில் ஏழு டன் வரை கிடைக்கும். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.20க்கும் குறைவாகவே இருந்தது. கத்தரி சாகுபடியில் உரம், பூச்சி மருந்து செலவு அதிகமாகும். தற்போது கிடைத்துள்ள விலை உயர்வு விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது என்றார்.
மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை