டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

5


சென்னை: டாஸ்மாக் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில், மது கொள்முதல், விற்பனை, சரக்கு போக்குவரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சில தினங்களுக்கு முன், 45 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதற்கான ஆதாரங்களை கைப்பற்றினர்.

அவற்றை ஆய்வு செய்தபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த ரத்தீஷ் ராஜூ என்பவரும் ஊழலுக்கு சூத்திரதாரிகளாக செயல்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாகனும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த ஊழல் வழக்கில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 பேர் சிக்கி உள்ளனர். இவர்களில் ரத்தீஷ் ராஜூ தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தலைமறைவாக ரத்தேஷ் ராஜூவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்கவும், இந்தியா வந்தால் கைது செய்யவும், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.

Advertisement