வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

1


சென்னை: சென்னையில் வார தொடக்க முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 14,220 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 1,13,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement